Posts

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

Image
ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம். அதற்கான வசதி செயலியில் வந்துள்ளது. இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் (Aadhaar App) என்ற புதிய செயலியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் ஆதார் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அது வந்து உள்ளது. அதன் மூலம் புதிய செல்போன் நம்பர் வாங்குவது, வங்கியில் புதிய கணக்கு தொடங்குவது, ஒட்டலில் தங்குவதற்கு ஆதார் அட்டை நகல் கொடுப்பது அல்லது கைரேகை வைப்பது எல்லாம் இனி தேவையில்லை. அந்த ஆதார் புதிய செயலியில் உள்ள கியூ-ஆர் கோடு காண்பித்தால் போதுமானது. அல்லது அவர்கள் காட்டும் கியூ.ஆர்.கோட்டினை ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் உறுதி செய்யப்படும். இந்த டிஜிட்டல் முறையால் நமது ஆதார் எண்ணையோ, முகவரியோ அவர்களால் பார்த்து கொள்ள முடியாது. தற்போது இந்த செயலியில் ஆதார் செல்போன் எண் மாற்றுவது, முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யும் புதியவசதி கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏற்கனவ...

ஏர்டெல் சேவையில் பாதிப்பு! பயனர்கள் அவதி!

Image
  ஏர்டெல் சேவையில் பாதிப்பு! பயனர்கள் அவதி! சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். ஏர்டெல் சேவை முடக்கப்பட்டதா? அதில் என்ன பிரச்னை? என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாலை 6 மணிமுதலே ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தைக் குறிப்பிட்டு (டேக் செய்து) இணையத்தில் பயனர்கள் பலர், புகார்களைப் பதிவு செய்துள்ளனர். சென்னை, மதுரை, தஞ்சாவூர், கோவை, நாகை உள்ளிட்டப் பகுதிகளில் இந்தப் புகார்கள் அதிகம் எழுந்துள்ளன. ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 3% சரிந்து, ரூ. 11,022 கோடியாக உள்ளதாக அந்நிறுவனம் இன்று (மே 13) அறிவித்திருந்தது. இதனிடையே அந்நிறுவனத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏர்டெல் நிறுவனம் சார்பில் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.                     ...

புது ரூல்ஸ்.. இனிமே Google Pay-க்கு 2 அக்கவுண்ட்.. ரூ.15000-க்கு மேல அனுப்ப முடியாது..

Image
  பு து ரூல்ஸ்.. இனிமே Google Pay-க்கு 2 அக்கவுண்ட்.. ரூ.15000-க்கு மேல அனுப்ப முடியாது.. கூகுள் பே (Google Pay) மூலம் யுபிஐ பணப் பரிவத்தனை செய்யும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐ (National Payments Corporation of India (NPCI) கொண்டு வந்துள்ள யுபிஐ சர்க்கிள் விதிகள் (UPI Circle Rules) அமலாகி இருக்கின்றன. இந்த விதிகள் மூலம் 2 அக்கவுண்ட்கள், ரூ.15000 உச்ச வரம்பு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் வர இருக்கின்றன. இந்த யுபிஐ சர்க்கிள் விதிகளால் என்னென்ன வரப்போகிறது என்பதை இப்போது பார்ப்போம். சொல்லப்போனால், இந்த விதிகள் கூகுள் பே கஸ்டமர்களுக்கு மட்டுமல்ல, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை வைத்திருக்கும் அனைத்து கஸ்டமர்களுக்கும் அமலுக்கு வருகிறது. ஆனால், முதலில் கூகுள் பே நிறுவனம் இந்த விதிகளை அமலுக்கு கொண்டுவருவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால், அந்த கஸ்டமர்களே இப்போது முதலில் இந்த விதிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் கூகுள் பே ஆப்பில் ஒரு பேங்குக்கு ஒரு யுபிஐ அக்கவுண்ட்டை மட்டுமே ஓப்பன் செய்ய ம...