Saturday, 24 July 2021

2 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு😥 அரசு கடும் உத்தரவு!!! எங்கே?? எப்போது???

2 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு😥 அரசு கடும் உத்தரவு!!! எங்கே?? எப்போது???



Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் படுத்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் கிடையாது. அத்தியாவசியப் பொருட்களுக்கான சேவைகள் மட்டும் தொடரும்.

மேலும் இன்று மாநிலம் முழுவதும் பிரம்மாண்ட கொரோணா பரிசோதனை முகாம்கள் நடத்தி ஒரே நாளில் 3லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

நன்றி

Saturday, 17 July 2021

How to Check Tamil Nadu 12th (HSC) Result 2021 Online|TN 12th Result 2021

 How to Check Tamil Nadu 12th (HSC) Result 2021 Online|TN 12th Result 2021


Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video

Result website 1 :- www.tnresult.nic.in

Result website 2 :- http://www.dge1.tn.nic.in

Result website 3 :- http://www.dge2.tn.nic.in

Result website 4 :- http://www.dge.tn.gov.in



Mark Sheet Download Link 1 :- www.dge.tn.gov.in

Mark Sheet Download Link 2 :- www.dge.tn.nic.in

Friday, 16 July 2021

+2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் ரெடி அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!!!

+2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் ரெடி அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!!!



Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video

+2 Mark Calculation Video Link :- Video Link

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் ஜூலை-31 ஆம் தேதிக்குள் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் தயார் நிலையில் இருக்கிறது என்றும், மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நன்றி

ஜூலை 19 கு பின் தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!!

 ஜூலை 19 கு பின் தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!!



தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நேரத்தில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் வழங்கப்படும் தளர்வுகள் குறித்து இன்று முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதில் திரையரங்குகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,500க்கு குறைவாக பதிவாகி வருகிறது. ஜூலை 19 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகள் குறித்து அனைத்து துறை உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் பல கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது.

அதன்படி காய்கறி, மளிகை கடைகள், மால்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஓட்டல்கள், பொது போக்குவரத்து, வழிபாட்டு தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவை காலை முதல் இரவு வரை 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்குகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் ஊரடங்கு தளர்வுகளில் இது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனவும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வர வாய்ப்புள்ளதால் தளர்வுகள் அளிப்பதில் கூடுதல் கவனம் தேவை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி

ஊராடங்கில் மேலும் புதிய தளர்வுகள் முதல்வர் அறிவிப்பு

ஊராடங்கில் மேலும் புதிய தளர்வுகள் முதல்வர் அறிவிப்பு



Video Link 1 :- watch Video

Video Link 2 :- Watch Video

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிலவற்றுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

இந்தநிலையில், மேலும் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

நன்றி

Sunday, 11 July 2021

கடைகள் திறப்பு நேரம் நீடிப்பு / பேருந்துகளில் இன்னும் பல தளர்வுகள்

 கடைகள் திறப்பு நேரம் நீடிப்பு / பேருந்துகளில் இன்னும் பல தளர்வுகள்


Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video


தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதேசமயம், மேலும் சில தளா்வுகளையும் அவா் அறிவித்துள்ளாா்.

அதன்படி, உணவகங்கள், தேநீா், நடைபாதைக் கடைகள் உள்ளிட்டவற்றை மூடுவதற்கான நேரம் இரவு 8 மணியில் இருந்து 9 மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 19-ஆம் தேதி காலை வரை நடைமுறையில் இருக்கும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

புதிய தளா்வுகள் என்ன?

புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடா்பான எழுத்துத் தோவுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தோவு நடத்தும் அமைப்புகள் முன்னதாகவே மாவட்ட ஆட்சியா்களிடம் தெரிவிக்க வேண்டும்.

உணவகங்கள், தேநீா் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனைக் கடைகள் ஆகியன வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகளுக்கும் நேர நீட்டிப்பு பொருந்தும்.

தொடரும் தடைகள்: புதுச்சேரி நீங்கலாக, பிற மாநிலங்களுக்கு இடையிலான தனியாா் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடா்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிா்த்து சா்வதேச விமான போக்குவரத்து சேவை, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சாா்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடா்கிறது.

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான தடை தொடா்ந்து அமலில் இருக்கும்.

கட்டுப்பாடுகள்: நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, திருமண நிகழ்வுகளில் 50 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிா்த்து, அனைத்துப் பகுதிகளிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடா்ந்து அனுமதிக்கப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகள்: கரோனா நோய்த் தொற்று காலத்திலும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், பொது மக்கள் கூடக் கூடிய இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளா் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்க வேண்டும். பரிசோதனை கருவி கொண்டு, உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். கடைகளில் பணிபுரிபவா்களும், வாடிக்கையாளா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும்.

குளிா்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்பட வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகமான நபா்களை அனுமதிக்கக் கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும், மற்றொவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

அபராத நடவடிக்கைகள்: முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடரும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவே, நோய்த் தொற்று குறைந்து வந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசின் நடவடிக்கைகளுக்கு தொடா்ந்து முழு ஒத்துழைப்பு அளித்து தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும்.

நன்றி

Monday, 5 July 2021

ஆதாரில் திருத்தம் அனைத்தும் 5 நிமிடத்தில் உங்கள் மொபைலில் நீங்களே செய்யலாம்

 ஆதாரில் திருத்தம் அனைத்தும் 5 நிமிடத்தில் உங்கள் மொபைலில் நீங்களே செய்யலாம்



குடிமக்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஆதார் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் UIDAI புதிய மேம்படுத்தப்பட்ட செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் தற்போது வேகமாக அனைத்து இடங்களிலும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது இதன் மூலம் நமக்கு பல்வேறு சிரமங்கள் குறைகிறது. அந்த வகையில் அரசு வழங்கிய ஆதார் அட்டையில் நீங்கள் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அதனை வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம். அதற்கான புதிய வசதியை தற்பொழுது UIDAI அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆன்லைன் சேவையை அணுகக்கூடிய பயனர்களுக்கு எளிதாக்கும் முயற்சியாக இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் நீங்கள் 35 ஆன்லைன் ஆதார் சேவைகளை பெறமுடியும்.

மொபைல் செயலியில் ஆதார் அப்ளிகேஷனை பயன்படுத்தும் நபர்களுக்கு UIDAI இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில் தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் முந்தைய பதிப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்து இருந்தால் அதை நீக்கி, தங்கள் மொபைலில் 35 ஆதார் சேவைகளைப் பெற சமீபத்திய mAadhaar ஐ பதிவிறக்கம் செய்யுமாறு UIDAI பயனர்களைக் கேட்டுக்கொண்டது. இந்த சேவைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே UIDAI இணையதளத்தில் கிடைத்தன ஆனால் பயனர்களுக்கு மொபைல் செயலி மூலம் கிடைக்கிறது.

ஆதார் அட்டையை பதிவிறகக்ம் செய்வது. உங்களுடைய ஆதார் நிலையை சரிபார்க்கவும் UID மற்றும் EID மீட்டெடுப்பதற்கான திறன், ஆதார் சரிபார்ப்பு சேவைகள், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் / மின்னஞ்சல் முகவரியின் புதுப்பிப்பு என அனைத்தும் மாற்றி கொள்ளலாம், மெய்நிகர் ஐடியின் உருவாக்கம்(Generation of virtual ID), பேப்பர்லெஸ் ஆஃப்லைன் இ-வெரிஃபிகேஷன், உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு கண்டறியும் வசதி என பல்வேறு அம்சங்களுடன் இந்த செயலில் ஒதுக்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்யலி மொழி பன்முகத்தன்மை வாய்ந்தது மக்களுக்கு இதன் வசதிகளை எளிதில் அணுக மொழி ஒரு தடையாக இருக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த, இந்த செயலியில் மொத்தம் 13 வெவ்வேறு மொழிகளில் வருகிறது, அவற்றில் ஒன்று ஆங்கிலம். மற்ற இந்திய மொழிகளான இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகியவை அடங்கும்.

நன்றி

Sunday, 4 July 2021

நாளை முதல் மக்கள் மகிழ்ச்சி நாளை முதல் எவை எல்லாம் இயங்கும் முழுவிவரம்

நாளை முதல் மக்கள் மகிழ்ச்சி நாளை முதல் எவை எல்லாம் இயங்கும் முழுவிவரம்



Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video

கோவை: கோவையில் நாளை பொதுப் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது அதே போல், வணிக வளாகங்களும் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் கோர தாண்டவம் முடிவுக்கு வந்துள்ளது. தொற்று பாதிப்பின் இரண்டாம் அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோவை உள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்ட போதிலும், கோவை உட்பட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அந்த வகையில், நாளை கோவையில் பேருந்து சேவைகள் துவங்க உள்ளன. கடந்த முறை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டபோது குறைவான அளவிலேயே பயணியகள் வந்ததால் இந்த தளர்வில் குறைவான அளவிலேயே பேருந்துகள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.

இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இதே போல் கோவில்களும் நாளை திறக்கப்பட உள்ளது. மேலும், நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கோவையில் உள்ள ப்ரூக் பீல்ட்ஸ், பன் மால், ப்ரோசான் மால் ஆகிய வணிக வளாகங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளாகங்களில் நீண்ட நாட்களாக இருப்பு வைக்கப்பட்டதால் துணி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் கடை உரிமையாளர்கள், தற்போதாவது செயல்பட அனுமதி கிடைத்ததை நினைத்து நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

நன்றி

Thursday, 1 July 2021

WhatsApp ல் நீங்கள் பார்த்ததை இனி யாராலும் பார்க்க இயலாது? அருமையான Update 2021

WhatsApp ல் நீங்கள் பார்த்ததை இனி யாராலும் பார்க்க இயலாது?  அருமையான Update 2021




Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video


நன்றி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...