உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? சிம்பிள் வழியில் தெரிஞ்சிக்கோங்க!
உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? சிம்பிள் வழியில் தெரிஞ்சிக்கோங்க! இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஆதார் என்பது 12 இலக்கங்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண்ணாகும். இது பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கும் போது ஆதார் தகவல் மற்றும் கே.ஒய்.சி-யை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியின்படி, சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் 12,000 குழந்தைகள் 2022-23 நிதியாண்டிற்கான உதவித்தொகையைப் பெறவில்லை, ஏனெனில் அவர்களின் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதன் நிலையை சரிபார்ப்பது மிகவும் அவசியமாகின்றது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரபூர்வ போர்ட்டலான ‘myAadhaar’ க்குச் சென்று உங்கள் எந்தக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்கலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால், அனைத்து க...