புது ரூல்ஸ்.. இனிமே Google Pay-க்கு 2 அக்கவுண்ட்.. ரூ.15000-க்கு மேல அனுப்ப முடியாது..
பு து ரூல்ஸ்.. இனிமே Google Pay-க்கு 2 அக்கவுண்ட்.. ரூ.15000-க்கு மேல அனுப்ப முடியாது.. கூகுள் பே (Google Pay) மூலம் யுபிஐ பணப் பரிவத்தனை செய்யும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐ (National Payments Corporation of India (NPCI) கொண்டு வந்துள்ள யுபிஐ சர்க்கிள் விதிகள் (UPI Circle Rules) அமலாகி இருக்கின்றன. இந்த விதிகள் மூலம் 2 அக்கவுண்ட்கள், ரூ.15000 உச்ச வரம்பு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் வர இருக்கின்றன. இந்த யுபிஐ சர்க்கிள் விதிகளால் என்னென்ன வரப்போகிறது என்பதை இப்போது பார்ப்போம். சொல்லப்போனால், இந்த விதிகள் கூகுள் பே கஸ்டமர்களுக்கு மட்டுமல்ல, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை வைத்திருக்கும் அனைத்து கஸ்டமர்களுக்கும் அமலுக்கு வருகிறது. ஆனால், முதலில் கூகுள் பே நிறுவனம் இந்த விதிகளை அமலுக்கு கொண்டுவருவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால், அந்த கஸ்டமர்களே இப்போது முதலில் இந்த விதிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் கூகுள் பே ஆப்பில் ஒரு பேங்குக்கு ஒரு யுபிஐ அக்கவுண்ட்டை மட்டுமே ஓப்பன் செய்ய ம...