Posts

Showing posts from May, 2025

ஏர்டெல் சேவையில் பாதிப்பு! பயனர்கள் அவதி!

Image
  ஏர்டெல் சேவையில் பாதிப்பு! பயனர்கள் அவதி! சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். ஏர்டெல் சேவை முடக்கப்பட்டதா? அதில் என்ன பிரச்னை? என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாலை 6 மணிமுதலே ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தைக் குறிப்பிட்டு (டேக் செய்து) இணையத்தில் பயனர்கள் பலர், புகார்களைப் பதிவு செய்துள்ளனர். சென்னை, மதுரை, தஞ்சாவூர், கோவை, நாகை உள்ளிட்டப் பகுதிகளில் இந்தப் புகார்கள் அதிகம் எழுந்துள்ளன. ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 3% சரிந்து, ரூ. 11,022 கோடியாக உள்ளதாக அந்நிறுவனம் இன்று (மே 13) அறிவித்திருந்தது. இதனிடையே அந்நிறுவனத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏர்டெல் நிறுவனம் சார்பில் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.                     ...