இலவச மின்கட்டண அளவு 200 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை

 இலவச மின்கட்டண அளவு 200 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை


தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக மின்கட்டணம் செலுத்த ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து இலவச மின்கட்டண அளவு 200 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நுகர்வோரே மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் அவதியில் உள்ளனர்.

இதனால் தற்போது 100 யூனிட் வரை மின்கட்டணம் இலவசமாக வழங்கப்படுவதை, 200 யூனிட்டாக உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மின்கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி

Popular posts from this blog