இ-பாஸ் பெறுவது எப்படி?
இ-பாஸ் பெறுவது எப்படி?
எதற்கெல்லாம் இ-பதிவு தேவை?
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாவட்டங்களுக்குள்ளும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு அவசியம்.
திருமணம் மற்றும் முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவச்சிகிச்சை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு அவசியம்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை அவசியம்.
இ-பதிவு விண்ணப்பிப்பது எப்படி?
Step : 1
முதலில் https://eregister.tnega.org/#/app/type என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
Step : 2
இணையதளத்தின் முகப்பு பகுதியில் தாங்கள் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் என்றால் அந்த அட்டவணையை தேர்வு செய்யுங்கள் அல்லது மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் அப்ளை செய்பவர்களாக இருந்தால் மற்றவர்கள் என்ற அட்டவணையை தேர்வு செய்யுங்கள்.
Step : 3
அதன்பிறகு வரும் பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 Captcha code-ஐ உள்ளீடு செய்து Send OTP என்பதை கிளிக் செய்யுங்கள்.
Step : 4
இப்பொழுது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு 6 இலக்க OTP எண் வரும். அந்த எண்ணை உள்ளிட்டு Login செய்யுங்கள்.
Step : 5
Login செய்து உள்நுழையும் பக்கத்தில்,
தனி நபர்/ குழு சாலை வழி பயணம் அல்லது தனி நபர் / குழு, ரயில் / விமானம் வழி தமிழ்நாட்டின் உள் நுழைதல் அல்லது தொழில் நிறுவனங்கள் என்று மூன்று வகையான ஆப்ஷன் கேட்கப்பட்டிருக்கும். அவற்றில் தங்களுக்கு எந்த வகை தேவையோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Step : 6
அதன் பிறகு பக்கத்தில்
காரணம் என்பதில் : நீங்கள் எந்த காரணத்திற்காக இ-பாஸ் அப்ளை செய்கிறீர்கள் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
அதன்பின்
பயண தேதி
விண்ணப்பதாரர் பெயர்
விண்ணப்பதாரர் அடையாள சான்றிதழ் எண்
விண்ணப்பதாரர் சேர்த்து மொத்த பயணிகளின் எண்ணிக்கை
வாகன எண்
எங்கு வரை பயணம் செய்ய போகிறீர்கள்?
பயண காரணத்திற்கான ஆவணம்
விண்ணப்பதாரர்களின் அடையாள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று
வாகன வகை போன்ற விவரங்களை தெளிவாக உள்ளீடு செய்ய வேண்டும்.
Step : 7
பயணத்துக்கு குறிப்பிட்டுள்ள காரணங்கள் தொடர்பான ஆவணங்களை (மருத்துவரின் பரிந்துரை சான்றிதழ்) பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஆன்லைனில் முறையாக சமர்ப்பித்த பின்னர், அவற்றை சரிபார்த்து விண்ணப்பதாரருக்கு இ-பாஸ் அளிக்கப்படும். அதன்பிறகு இ-பாஸ் சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
நன்றி
