இனி இவர்கள் தான் உங்கள் மாவட்டத்தின் சிறப்பு அதிகாரிகள்

இனி இவர்கள் தான் உங்கள் மாவட்டத்தின் சிறப்பு அதிகாரிகள் 




News Video Link :- Click This

தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனோ இரண்டாவது அலை தொற்று காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளது. ஒருபுறம் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்து மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.


நேற்று தமிழக முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌, தலைமைச்‌ செயலகத்தில்‌ கொரோனா நோய்த்‌ தொற்று தடுப்பு மற்றும்‌ நிவாரண நடவடிக்கைகள்‌ குறித்து கோயம்புத்தூர்‌, ஈரோடு, மதுரை, திருப்பூர்‌, சேலம்‌ மற்றும்‌ திருச்சிராப்ள்ளி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன்‌ காணொலிக்‌ காட்சி வாயிலாக ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


இக்கூட்டத்தில்‌ எடுக்கப்பட்ட முடிவின்படி கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மற்றும்‌ ஈரோடு ஆகிய மாவட்டங்களில்‌ சிறப்புக்‌ கவனம்‌ செலுத்திடவும்‌, மாவட்ட ஆட்சியர்களுடன்‌ ஒருங்கிணைந்து, கொரோனா நோய்த்‌ தடுப்பு மற்றும்‌ சிகிச்சைகள்‌ தொடர்பான ஒருங்கிணைப்புப்‌ பணிகளை கண்காணிக்கவும்‌, இம்மூன்று மாவட்டங்களுக்கும்‌ இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கு திரு.மு.அ.சித்திக்‌, இ.ஆ.ப., முதன்மைச்‌ செயலாளர்‌ /ஆணையர்‌, வணிகவரித்‌ துறை அவர்கள் நியமனம் செய்யபட்டுள்ளார்.

திருப்பூர்‌ மாவட்டத்திற்கு திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப, வேளாண்மைத்‌ துறை செயலாளர்‌ அவர்கள் நியமனம் செய்யபட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர்‌ இரா.செல்வராஜ்‌, இ.ஆ.ப, நில அளவை மற்றும்‌ நிலவரித்‌ திட்டஇயக்குநர்‌ அவர்கள் நியமனம் செய்யபட்டுள்ளார்.

Popular posts from this blog