Thursday, 3 June 2021

ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மின்தடை இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்

 ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மின்தடை இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 10ஆம் தேதி முதலில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு பின்னர் விதிகள் கடுமையாக்கப்பட்டன. இதனால் பலரும் வீட்டில் இருந்தே பணியாற்றிவருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் கூட ஊரடங்கு சில நாட்களுக்கு தொடரும் என்றே கூறப்படுகிறது. அதாவது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை மின்தடை என்பது இருக்காது என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் அறிவிக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஒத்திவைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கினால் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதாலும், மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதாலும் அவர்களது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நிறைவுற்ற பிறகு பராமரிப்பு பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

நன்றி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...