தேநீர் கடைகளை திறக்க நாளை முதல் அனுமதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தேநீர் கடைகளை திறக்க நாளை முதல் அனுமதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


Video Link 1 :- Click This

Video Link 2 :- Click This

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர கரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில், காலை 6 முதல் மாலை 5 வரை தேநீர் கடைகள் செயல்படும் என்றும் அதேநேரத்தில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில் தேநீர் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நன்றி

Popular posts from this blog