பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
Video Link 1 :- watch video
Video Link 2 :- watch video
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொடர்பாக பெற்றோர்கள் அச்சம் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடங்கி படிப்படியாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
நன்றி