இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி
இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி
இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்பதாக தமிழக முதல்வர் மக்களின் வாழ்வாதாரம் கருதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருந்தது.
இந்த ஊரடங்கின் பொழுது கொரோனா தாக்கம் குறைவாகவுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து துணிக்கடைகளும் குளிர்சாதன வசதியின்றி திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதுடன், வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி
