ஈரோட்டில் மீண்டும் முழு முடக்கம் அமலாகிறது🙄 மக்கள் அதிர்ச்சி😷

ஈரோட்டில் மீண்டும் முழு முடக்கம் அமலாகிறது🙄 மக்கள் அதிர்ச்சி😷



தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வந்ததையடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. பின்னர் தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டு கடந்தவாரம் வரை நீட்டிக்கப்பட்டு வந்தது. அதாவது கடந்த 7ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவந்தாலும் கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் தொற்றுபாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது

மாவட்டம் முழுவதும் 145க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி இருந்தாலும் அதனையும் குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது மளிகைக்கடைகளின் நேரத்தை குறைத்து இயக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட அனைத்து வியாபாரிகள் சார்பில் இன்று முதல் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இந்த சங்கங்களின் கீழ் மொத்தம் 20 ஆயிரம் மளிகைக் கடைகள் இயங்கி வருகின்றன. தொற்றின் தாக்கம் காரணமாக வியாபாரிகள் தாமாகவே முன்வந்து மளிகை கடை நேரத்தை குறைத்து உள்ளனர்.

இதேபோல் மாநகர் பகுதியில் உள்ள 2250 மளிகைக் கடைகள் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருந்தது. 1 மணிக்கு பிறகு அனைத்து மளிகை கடைகளும் அடைக்கப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனிடம் அனுமதி கடிதம் அளித்து உள்ளனர்.

பொதுமக்கள் நலனுக்காகவும், வியாபாரிகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நடவடிக்கையை பொதுமக்களும் வரவேற்றுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தொற்று அதிகமாக இருக்கும் ஒழலக்கோவில் பகுதியில் ஊராட்சி சார்பில் வரும் 14ஆம் தேதி வரை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி


Popular posts from this blog