நன்றி
Saturday, 26 June 2021
திங்கள் முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் Breaking
திங்கள் முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் Breaking
தமிகழத்தில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை 6 மணிமுதல் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்களை வகை 1, வகை 2 மற்றும் வகை 3 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் வகை 3க்கு ஏற்கனவே பேருந்து சேவைகள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த 27 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில் பேருந்து சேவையானது, ஜூன் 28ஆம் தேதி காலை 6 மணிமுதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்,
திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 - (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்
ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி
ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...
-
ஏர்டெல் சேவையில் பாதிப்பு! பயனர்கள் அவதி! சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். ...
-
How to Remove Voice or Music From Song in Tamil🎸| Remove Vocals From Song in Tamil🎤 Website Link :- Click Here Video Link :- Play Video ...
-
ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...

