வேலைக்கு செல்ல ePass பதிவு செய்வது எப்படி? HOW TO APPLY VEHICLE EPASS FOR WORK !! NEW UPDATE
வேலைக்கு செல்ல ePass பதிவு செய்வது எப்படி? HOW TO APPLY VEHICLE EPASS FOR WORK !! NEW UPDATE
Video Link 1 :- Watch Video
Video Link 2 :- Watch Video
Website Link :- Click This
வேலைக்கு செல்ல ePass பதிவு செய்வது எப்படி? HOW TO APPLY VEHICLE EPASS FOR WORK !! NEW UPDATE
சுய தொழில் செய்வோர் ஒரேநேரத்தில் விண்ணப்பித்து வருவதால் இ-பதிவு இணையதளம் முடங்கியது.
தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. மின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள் இணையப் பதிவுடன் பணிபுரியவும் இசைவு அளிக்கப்பட்டிருக்கிறது.
மின்பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயா்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் செயல்படலாம்.
ஹாா்டுவோ விற்பனைக் கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், கல்விப் புத்தகங்கள், எழுது பொருள்கள் விற்பனைக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இணையப் பதிவுடன் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து இணைய அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சுய தொழில் செய்வோருக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அனைவரும் ஒரேநேரத்தில் இ-பதிவுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் இ-பதிவு இணையதளம் முடங்கியது
