ஏ ஆர் ரஹ்மான் அணிந்து இருந்த Mask இன் சிறப்பு அம்சம் என்ன

ஏ ஆர் ரஹ்மான் அணிந்து இருந்த Mask இன் சிறப்பு அம்சம் என்ன


Video Link 1 :- Watch video

VIDEO link 2 :- Watch Video

சென்னை: ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தடுப்பூசி போட வந்திருந்த போது அனைவரின் கண்களும் அவர் அணிந்திருந்த மாஸ்க்கின் மீது இருந்தது. அப்படி என்ன அதில் விசேஷம் என்பதை பார்க்கலாம்.

கொரோனா காலம் தொடங்கியதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க் துணியாலும், மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்காலும் செய்யப்படுகிறது.


வசதி படைத்தவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த கற்கள் பதித்த மாஸ்க்குகளை அணிகிறார்கள்.

அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நீங்கள்... என கேள்வி எழுப்பியிருந்தார்.

ட்விட்டர்

ட்விட்டர்

ரஹ்மானை ட்விட்டரில் பார்த்து மகிழ்ந்த அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் அவர் அணிந்திருந்த மாஸ்க்கின் மீது கண்ணாக இருந்தன. அப்படி என்னதான் அந்த மாஸ்க்கில் இருக்கிறது என்பது பார்ப்போம். இது ஒரு பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இதை ஆர்டர் செய்தால் என்னென்ன இருக்கும் என இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாஸ்க்

மாஸ்க்

இதில் இரு சிறிய பெட்டிகள் உள்ளன. ஒன்றில் மாஸ்க்கிற்கு தேவையான உதிரிபாகங்கள், இன்னொரு பெட்டியில் மாஸ்க் இருக்கும். இதில் மொத்தம் 8 பொருட்கள் இருக்கும். மாஸ்க், ஃபேஸ் கார்டு, ஹெபா பில்டர், இன்னர் பில்டர், யூஎஸ்பி கேபிள், கழுத்து வளைவு, பேக், வாடிக்கையாளர் கையேடு ஆகியன இருக்கும்.

மாதம் ஒரு முறை

மாதம் ஒரு முறை

இதில் உள்ள ஃபேஸ் கார்டு மருத்துவ சிலிகானால் செய்யப்பட்டது. இதை பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான். 99 சதவீதம் கெட்ட காற்றை சுத்தம் செய்து தூய்மையான காற்றை இந்த ஹெபா பில்டர்கள் வழங்கும். இவற்றை மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டியது கட்டாயம்.

இணைத்தல்

இணைத்தல்

இன்னர் பில்டரை ஃபேஸ் கார்டுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதை 3 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மாஸ்க்கை சார்ஜ் செய்ய மைக்ரோ யூஎஸ்பி கேபிள் வழங்கப்படுகிறது. முதலில் ஃபேஸ்கார்டுடன் இன்னர் பில்டரை இணைக்க வேண்டும்.

பிரஸ்

பிரஸ்

அதன் பின்னர் பில்டர் கவரின் ஹெபா பில்டரை பொருத்த வேண்டும். அந்த பில்டரில் ஒரு ஏரோ மார்க் போட்டிருக்கும் அதன் படி பொருத்த வேண்டியது அவசியம். அதன் பின்னர் ஃபேஸ் கார்டை மாஸ்கில் பொருத்த வேண்டும். மாஸ்கில் 3 மோடுகள், அதாவது ஃபேன் ஸ்பீடுகள் உள்ளன. முதலில் மாஸ்க்கை குறைந்த மோடில் ஆன் செய்யலாம். இரண்டாவது நடுத்தர மோடில் ஆன் செய்யலாம்,. 3ஆவது ஹை மோடில் ஆன் செய்யலாம். 4 முறை அந்த பட்டனை பிரஸ் செய்தால் மாஸ்க் ஆஃப் ஆகிவிடும்.

சார்ஜிங்

சார்ஜிங்

பேட்டரி 100 முதல் 70 சதவீதம் வரை இருந்தால் பச்சை நிறத்திலும் 70 முதல் 15 சதவீதம் இருந்தால் ஆரஞ்ச் நிறத்திலும் மிகவும் டிம்மாக எறிந்தால் 15 சதவீதத்திற்கும் குறைவாக சார்ஜ் இருப்பதை அறிந்து கொள்ளலாம். லோ மோடில் பயன்படுத்தினால் 8 மணி நேரத்திற்கு சார்ஜ் நிற்கும். ஹை மோடில் பயன்படுத்தினால் 2 மணி நேரத்திற்கு சார்ஜ் நிற்கும்.

நன்றி

Popular posts from this blog