பள்ளிகள் நேரம் மாற்றப்படுகிறது தமிழகத்தில்
பள்ளிகள் நேரம் மாற்றப்படுகிறதா கோட்டைக்கு பறக்கும் கோரிக்கை சென்னை: பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பு வெளிவருமா? தமிழக மாணவர்களுக்கு விரைவில் குட்நியூஸ் வரக்கூடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை... மாணவர்களும் ஆன்லைன் மூலம்தான் படித்து வந்தனர்.. ஆன்லைனில்தான் தேர்வுகளும் நடந்து வந்தது.. இதையடுத்து, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன. கோடை வெயில் இந்நிலையில், வெயில் இப்போதே தமிழகத்தை வாட்ட துவங்கிவிட்டது.. வரும் மோ மாதம் இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.. எப்போதுமே இந்த கோடை வெயிலை கணக்கிட்டுதான், கோடை விடுமுறைகளை அரசும் அறிவித்து வருகிறது.. ஆனால், ஏப்ரல் மாதமே வெயில் தாக்கம் உச்சத்துக்கு வந்துள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளமாறன் எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்க...