சமையல் எண்ணெய் விலை ஒன்றரை மாதத்தில் Rs 60 வரை உயர்ந்து உள்ளது
சேலம்: உலகளவில் மலேசியாவில் பாமாயிலும், அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் சூரியகாந்தி எண்ணெயும், ரஷ்யா, உக்ரைன் நாடுகளிலிருந்து கச்சா சமையல் எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகிறது.
சமையல் எண்ணெயை பொறுத்தமட்டில் இந்தியாவின் தேவைக்கு வெளிநாடுகளையே பெரும்பாலும் நம்பி இருக்கிறோம். இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. ரஷ்யா, உக்ரைனில் இருந்து வரவேண்டிய எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை மாதத்தில் சமையல் எண்ணெய் விலை 30முதல் 40சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மாத வருமானத்தில் கூடுதல் செலவு ஏற்படுவதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலம் சமையல் எண்ணெய் வியாபாரிகள் கூறுகையில், ''ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால், அங்கிருந்து கக்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு லிட்டர் ஆயில் ₹130 லிட்டருக்கு விற்றது. போர் தொடங்கிய நிலையில், கடந்த ஒன்றரை மாதத்தில் லிட்டர் விலை ₹190 வரை உயர்ந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த இறக்குமதியை அதிகரிக்க வேண்டும். மேலும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உற்பத்தியையும் அதிகரிக்க ேவண்டும்,'' என்றனர்.
நன்றி