கடைகளில் பில் போட.. செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம்.. அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு
கடைகளில் பில் போட.. செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம்.. அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு இந்த நிலையில்தான், கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்கு பில் போட செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தற்போது பெரும்பாலான கடைகளில் பொருட்கள் வாங்கிய பின் பில் போடுவதற்கு செல்போன் எண் கேட்கப்படுகிறது. உதாரணமாக மால்களில் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் போன் நம்பர் கேட்கப்படுகிறது. பெரிய கடைகளிலும் போன் நம்பர் கொடுத்தால்தான் பில் போடுவோம் என்றே கூறப்படுகிறது. ஆனால் மக்கள் பலரும் போன் நம்பரை பகிர விரும்புவது இல்லை. பல இடங்களில் வாடிக்கையாளர்கள் சட்ட விதிகளை சொல்லி.. நம்பரை கொடுக்க மாட்டோம் என்று கூறினாலும் கூட.. நம்பர் கொடுத்தால்தான் பொருட்களை கொடுப்போம் என்று சொல்லும் நிலையும் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பரை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையே நிலவுகிறது. என்ன மோசடி? இதை வைத்து சில கடைகள் விளம்பரங்களை செய்வது, மோசடிகளை செய்வது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக 1. சில கடைகள் நம்முடைய போன் எண்களை லோன் நிறுவனங்களுக்கு விற்கின்ற...