கடைகளில் பில் போட.. செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம்.. அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு
இதனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பரை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையே நிலவுகிறது.
என்ன மோசடி?
இதை வைத்து சில கடைகள் விளம்பரங்களை செய்வது, மோசடிகளை செய்வது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக
1. சில கடைகள் நம்முடைய போன் எண்களை லோன் நிறுவனங்களுக்கு விற்கின்றன. நாம் செலவு செய்யும் தொகையை வைத்து நம்முடைய வாழ்க்கைமுறையை கணக்கிட்டு லோன் கொடுக்கும் நிறுவனங்கள் நம்மை சுற்றி சுற்றி வருகின்றன.
2. மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பலவற்றிற்கும் நமது போன் எண் பகிரப்படுகிறது.
3. நாம் பொருட்கள் வாங்கும் நிறுவனங்கள் சிறப்பு ஆபர்கள் இருந்தால் நமக்கு மெசேஜ் அனுப்புகின்றன.
இப்படி நாம் பில் போட கொடுக்கும் நம்பரை நமக்கே தெரியாமல்.. நம்முடைய அனுமதியே இல்லாமல் பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையத்தில்தான், கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்கு பில் போட செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
என்ன உத்தரவு
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பாக பெரிய வியாபாரிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
துறையின் செயலாளர் ரோகித் குமார் சிங் இது தொடர்பாக கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இப்படி செய்வது சட்டப்படி விதி மீறல் என்று அவர் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்
வாடிக்கையாளர்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் தனிப்பட்ட செல்போன் எண் விவரங்களை தரக்கூடாது. இதை தந்தால்தான் பில் போடுவோம் என்று தொல்லை செய்ய கூடாது.
இது சட்டத்திற்கு எதிரானது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை இது., இது பிரைவசி விதிகளுக்கு எதிரானது. வாடிக்கையாளர்களின் நம்பரை இவர்கள் எங்கே பாதுகாக்கிறார்கள் என்பதில் கேள்வி உள்ளது.
ரீடெயில் விபாபாரிகள், சிஐஐ, பிக்கி போன்ற அமைப்புகள் அனைத்திற்கும் இது தொடர்பாக அறிவுரை வழங்கி இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் தனிப்பட்ட செல்போன் எண் விவரங்களை கேட்க கூடாது. அது வரம்பு மீறல் என்று அறிவுத்தி உள்ளோம்.
இதற்கு முன் வாங்கிய எண்களை ப்ரோமோஷன் பணிகளுக்கு பயன்படுத்துவது, விற்பனை செய்வது தவறானது என்று மத்திய அரசு தனது அறிவிப்பில் கூறி உள்ளது. இதனால் கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்கு பில் போட செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
News Link :- Click here
நன்றி