Advertisemen
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெட்-அப் திரை அறிமுகம்.. இனி செல்போனை குனிஞ்சி குனிஞ்சு பாத்திட்டு போக தேவை இல்ல!
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டில் பொருத்தி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஹெட்ஸ்-அப் திரை (Helmet Head-up Display) ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இருசக்கர வாகன இயக்கத்தை சுலபமாக்கும் பொருட்டே இந்த உயர் வகை தொழில்நுட்ப கருவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது. தற்போது இக்கருவி விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.கார் ஓட்டுநர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் ஹெட்ஸ்-அப் திரை இப்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையிலேயே உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் இரண்டு இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பலன்பெறும் விதமாக மிக சிறிய ஹெட்ஸ்-அப் திரையை உருவாக்கி இருக்கின்றன.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டைகேட் (Digades) நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் டில்ஸ்பெர்க் (Tilsberk). இந்த நிறுவனமே இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெட்ஸ்-அப் திரை உருவாக்கி இருக்கின்றது. டில்ஸ்பெர்க் நிறுவனம் இந்த கருவியை வேறொரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தே தயாரித்து இருக்கின்றது
நேவிகேஷன் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் சைஜிக் (Sygic) நிறுவனத்துடன் இணைந்தே இருசக்கர வாகனங்களுக்கான ஹெட்ஸ்-அப் திரை உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கியரை இருசக்கர வாகனத்துடன் இணைக்கும்பட்சத்தில் பல்வேறு முக்கிய தகவல்களை இந்த திரை வாயிலாகவே அறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கியர் இருக்கும் பொசிஷன், ஆர்பிஎம், ஸ்பீடு லிமிட், பெட்ரோல் அளவு, நேரம் மற்றும் வழித் தடம் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த குட்டி திரை வழங்கும். செல்போனை பார்த்தபடியோ அல்லது இருசக்கர வாகனத்தின் திரையைப் பார்த்தபடியோ பயணிப்பதை தவிர்க்க இந்த திரை மிகுந்த உதவியாக இருக்கும்.
இதற்காகவே இந்த திரையை ஜெர்மன் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போது வழித் தடத்தை அறிந்து கொள்ள செல்போன் திரை அல்லது இருசக்கர வாகனத்தின் திரையைக் காட்டாயம் பார்த்தாக வேண்டும் என்கிற சூழல் நிலவுகின்றது. அவ்வாறு அதை பார்க்கும்போது கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்தைச் சந்திக்கும் சூழல் உருவாகின்றது.இதைத் தவிர்க்க இந்த குட்டி ஹெட்ஸ்-அப் திரை பெரும் உதவியாக இருக்கும். ப்ளூடூத் வாயிலாக செல்போன் உடன் இந்த கருவியை இணைத்துக் கொள்ள முடியும். மேலும், இந்த கருவியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 12 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதற்கான பேக்-அப்பை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கே இந்த கருவியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கருவியை எந்த ஹெல்மெட்டில் வேண்டுமானாலும் சுலபமாக இணைத்தல் அல்லது அகற்றல் ஆகியவற்றைச் செய்துக் கொள்ள முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அதிகபட்சம் செகண்டுகள் மட்டுமே இந்த செயலுக்கு எடுத்துக் கொள்ளுமாம்.
இந்த கருவியைக் கன்ட்ரோல் செய்ய செல்போன் செயலி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக ஹெட்ஸ்-அப் திரையை கன்ட்ரோல் செய்தல் மற்றும் கஸ்டமைஸ் செய்தல் ஆகியவற்றைச் செய்துக் கொள்ள முடியும். தற்போது ஜெர்மனில் மட்டுமே இந்த கருவியை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் வெகு விரைவில் உலக அளவில் இந்த கருவி விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் பெருமளவில் விபத்துகள் குறைவதற்கான சூழல் உருவாகும். இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு சிலர் வழிக்காக செல்போனை பார்க்கும்போதே விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த மாதிரியான சூழலில் இருந்து காக்கவே திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலை வழங்கும் சிறிய ஹெட்ஸ்-அப் திரை உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹெட்ஸ்-அப் திரை, ஓட்டுநர்களுக்கு அவர்களின் சிதறவிடாமல் தகவல்களை வழங்கும் திறன் கொண்டது. இப்போது வரை நவீன கால கார்களில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்பெறும் வகையில் இரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் ஹெல்மெட் ஹெட்ஸ்-அப் திரையை உருவாக்கி இருக்கின்றன.
Read more at : LINK
Read more at : LINK
Advertisemen