-->

வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்.. பக்குவமா பார்த்து-பார்த்து செதுக்கிய Redmi 12 மொபைல்..

Advertisemen

 வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்.. பக்குவமா பார்த்து-பார்த்து செதுக்கிய Redmi 12 மொபைல்..


சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆனா ரெட்மி (Redmi) இப்போது புதிதாக ரெட்மி 12 (Redmi 12) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யவிருக்கிறது. ரெட்மி 12 நாட்டில் அமேசான் வழியாக விற்பனை செய்யப்படும் என்று பிராண்ட் முன்பு தெரிவித்திருந்தது.

தற்போது, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக, புதிய ரெட்மி 12 (Redmi 12) பிளிப்கார்ட் (Flipkart) மூலமாகவும் வெளிவரும் என்ற தகவலை புதிய மைக்ரோசைட் லைவ் விளம்பரம் உறுதி செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அமேசான் மற்றும் Mi ஸ்டோருடன் கூடுதலாக Flipkart வழியாக விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய ரெட்மி 12 சாதனம் மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Silver), ஜேட் பிளாக் (Jade Black) மற்றும் பேஸ்ட்டல் ப்ளூ (Pastel Blue) வண்ண விருப்பங்களில் வரும் என்பதை சியோமி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 Redmi 12 ஸ்மார்ட்போன் ஆனது கிரிஸ்டல் கிளாஸ் (Crystal glass) வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் Xiaomi தெரிவித்துள்ளது. ரெட்மி 12 (Redmi 12) இந்திய வேரியண்ட் மாடல் சமீபத்தில் Geekbench பெஞ்ச்மார்க் தரவுத்தளத்தில் காணப்பட்டது. இதில் இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88) சிப்செட்டை கொண்டிருக்கும் என்பதை காண்பிக்கிறது.

 கீக்பெஞ்ச் (Geekbench) பட்டியலின்படி, Redmi 12 இந்திய மாடல் 6 ஜிபி ரேம் அளவை கொண்டிருக்கும் மற்றும் Android 13 உடன் இயங்கும் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ டீஸர்கள் மற்றும் படங்களை அடிப்படையாகக் கொண்ட Redmi 12 இந்திய மாறுபாடு, தாய்லாந்தில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய மாறுபாட்டின் அதே மாதிரியாகத் தெரிகிறது.




Redmi 12 குளோபல் வேரியண்ட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றன என்பதை பார்க்கலாம். இந்த போனின் டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 6.79' இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது முழு எச்டி+ (1080 × 2400 பிக்சல்) தீர்மானம் கொண்ட 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. 


இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88 SoC) உடன் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) உடன் வருகிறது. இது 4 ஜிபி மற்றும் 8 ஜிபி LPDDR4X ரேம் உடன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி eMMC 5.1 ஸ்டோரேஜ் உடன் வரும். இதில் பிரத்யேக மைக்ரோ-SD கார்டு ஸ்லாட் அம்சமும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 உடன் இயங்குகிறது. இந்த மொபைல் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. 8MP செல்பி கேமராவை பேக் செய்துள்ளது. இது 5000mAh பேட்டரியுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.12,999 என்ற தொகையை நெருங்கும் என்று கூறப்படுகிறது.



Read more at : LINK



Advertisemen

Disclaimer: Gambar, artikel ataupun video yang ada di web ini terkadang berasal dari berbagai sumber media lain. Hak Cipta sepenuhnya dipegang oleh sumber tersebut. Jika ada masalah terkait hal ini, Anda dapat menghubungi kami disini.
Related Posts
Disqus Comments
© Copyright 2017 TamiL TrickS Kannan - All Rights Reserved - Created By BLAGIOKE & Best free blogger templates