இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெட்-அப் திரை அறிமுகம்.. இனி செல்போனை குனிஞ்சி குனிஞ்சு பாத்திட்டு போக தேவை இல்ல!
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெட்-அப் திரை அறிமுகம்.. இனி செல்போனை குனிஞ்சி குனிஞ்சு பாத்திட்டு போக தேவை இல்ல! இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டில் பொருத்தி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஹெட்ஸ்-அப் திரை (Helmet Head-up Display) ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இருசக்கர வாகன இயக்கத்தை சுலபமாக்கும் பொருட்டே இந்த உயர் வகை தொழில்நுட்ப கருவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது. தற்போது இக்கருவி விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. கார் ஓட்டுநர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் ஹெட்ஸ்-அப் திரை இப்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையிலேயே உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் இரண்டு இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பலன்பெறும் விதமாக மிக சிறிய ஹெட்ஸ்-அப் திரையை உருவாக்கி இருக்கின்றன. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டைகேட் (Digades) நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் டில்ஸ்பெர்க் (Tilsberk). இந்த நிறுவனமே இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெட்ஸ்-அப் திரை உருவாக்கி இருக்கின்றது. டில்ஸ்பெர்க் நிறுவனம் இந்த கருவியை வேறொரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தே தயாரித்து இருக்கின்றது நேவிகேஷன் தொழில்...