Fake Indian Currency: ரூ. 500 நோட்டுகளில் போலியான நோட்டுகள் கண்டு பிடிப்பது எப்படி
Fake Indian Currency: ரூ. 500 நோட்டுகளில் போலியான நோட்டுகள் கண்டு பிடிப்பது எப்படி Fake Indian Currency: ரூ. 500 நோட்டுகளில் போலியான நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட அறிக்கையின் படி, 2020-21 ஆம் ஆண்டில் ரூ .500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் ( Fake Banknote ) அதிக புழக்கத்தில் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கள்ள நோட்டு புழக்கத்தின் மொத்த மதிப்பில் 500 ரூபாய் கள்ள நோட்டு 31.3 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய 500 ரூபாய் மதிப்புள்ள 39,453 போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1.11 லட்சம் மதிப்புள்ள போலி ரூ .100 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 2.09 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதால், ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் போலியானதா? என்பதை எப்படி கண்டிப்பிடிப்பது என சி...