Monday, 28 June 2021

இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி

இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி




Video Link 1 :- Watch Video 

Video Link 2 :- Watch Video

இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்பதாக தமிழக முதல்வர் மக்களின் வாழ்வாதாரம் கருதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருந்தது.

இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் பொழுது கொரோனா தாக்கம் குறைவாகவுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து துணிக்கடைகளும் குளிர்சாதன வசதியின்றி திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதுடன், வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

Sunday, 27 June 2021

பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்



Video Link 1 :- watch video

Video Link 2 :- watch video

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொடர்பாக பெற்றோர்கள் அச்சம் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


ஜூலை மாதம் அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடங்கி படிப்படியாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி

Saturday, 26 June 2021

🔴TN 12th Public Exam Result Date Out 2021 12-ஆம் வகுப்பு Result தேதி வெளியீடு 12th Mark Calculation

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது



Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch video

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இருப்பினும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்தநிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.




10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12-ம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களை கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

  • 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதமாக கணக்கிடப்படும்.

  • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 20 சவீதமாக கணக்கிடப்படும்.

  • 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 30 சதவீதமாக கணக்கிடப்படும்.

  • 12-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

  • செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

  • கொரோனா உள்ளிட்ட ஏதேனும் காரணங்களால் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

  • 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

  • கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்திக் கொண்டு 35 சதவீத மதிப்பெண் வழங்கப்படும்.

திங்கள் முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் Breaking

திங்கள் முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் Breaking
தமிகழத்தில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை 6 மணிமுதல் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்களை வகை 1, வகை 2 மற்றும் வகை 3 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் வகை 3க்கு ஏற்கனவே பேருந்து சேவைகள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 27 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில் பேருந்து சேவையானது, ஜூன் 28ஆம் தேதி காலை 6 மணிமுதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. வகை 1 - (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் வகை 2 - (23 மாவட்டங்கள்) அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள். வகை 3 - (4 மாவட்டங்கள்) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்
 நன்றி

Wednesday, 23 June 2021

அரசு பேருந்துகளில் நாளை முதல் உங்களுக்கும் இலவச பயணச்சீட்டு அனைவரும் மகிழ்ச்சி

அரசு பேருந்துகளில் நாளை முதல் உங்களுக்கும் இலவச பயணச்சீட்டு அனைவரும் மகிழ்ச்சி


Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video

Ticket Image Link :- Click This

அரசு பேருந்துகளில் பெண்களை போல இனி இவர்களுக்கும் இலவச பயணம்! தமிழக அரசு அறிவிப்பு

திமுக பதவியேற்றதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான அறிவிப்பை முதலில் வெளியிட்டது.பெண்களுக்கு பெரிதும் பயனளிக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

இதனையடுத்து தமிழக அரசு அறிவிப்பின் படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்ய நாளை முதல் இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்..


மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்து இயக்கம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர்" பெண்களுக்கான இலவச பஸ் பயணத்திற்காக ரூ. 1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து வசதி வழங்கபடுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு டிக்கெட், அவருக்கு உதவியாக வரும் நபருக்கு ஒரு டிக்கெட், 3-ம் பாலினத்தவருக்கு ஒரு டிக்கெட் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி நிறங்களில் இலவச பஸ் டிக்கெட் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இந்த இலவச பேருந்து டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..

நன்றி

Sunday, 20 June 2021

தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு || 50% பேருந்துகள் இயக்கப்படுகின்றன

தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு || 50% பேருந்துகள் இயக்கப்படுகின்றன



Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video

மாவட்ட வகை விவரம் :- Image download

தமிழகத்தின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்தக்கட்ட ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்றுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஜூன் 28 வரை அடுத்தக்கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

வகை 1 - கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.

வகை 2 - அரியலூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட வகை 1 மற்றும் வகை 3ல் சேராத 23 மாவட்டங்கள்

வகை 3 - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.
இதில் வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளோடு ஊரடங்கு நீடிக்கும்.

வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளோடு, பூக்கடை, காய்கறி, பழ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், உணவகங்கள், இனிப்பு கடைகள், பேக்கரி மற்றும் மற்ற கடைகள் இரவு 9 மணி வரையிலும் செயல்பட அனுமதி

அரசின் முக்கிய துறை அலுவலகங்கள் 100% பணியாளர்களுடனும், மற்ற அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடனும் இயங்கலாம்

பள்ளி, கல்லூரிகளில் அட்மிசன் பணிகள் தொடர்பான செயல்பாடுகளுக்கு அனுமதி
சென்னை. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி!

வாகன விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி!

இ-பாஸ் பதிவுடன் வாடகை வாகனங்கள் இயங்க அனுமதி மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நன்றி

Friday, 18 June 2021

ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள், வரும் செப்டம்பர் 30 வரை செல்லும் மக்கள் மகிழ்ச்சி

 ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள், வரும் செப்டம்பர் 30 வரை செல்லும் மக்கள் மகிழ்ச்சி



Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video

புதுடெல்லி: ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள், வரும் செப்டம்பர் 30 வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுனர் உரிமம், உடல் தகுதி சான்று, உள்ளிட்ட ஆவணங்களை காலாவதி தேதிக்கு பிறகு, மக்களால் புதுப்பிப்பது இயலாமல் போனது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆவணங்களின் காலாவதி தேதியை மத்திய அரசு அவ்வப்போது நீட்டித்து வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து ஓட்டுனர் உரிமம், பதிவு செய்தல் உள்ளிட்ட மோட்டார் வாகனம் தொடர்பான ஆவணங்களின் காலாவதி தேதி முடிந்து இருந்தாலோ, புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ அவற்றை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



இதுவரையில் இதற்கு 6 முறை மத்திய அரசு நீட்டிப்பு அளித்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாடு சான்றிதழுக்கு இந்த கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

மாசு கட்டுப்பாடு நாடு முழுவதும் ஒரே சான்றிதழ்: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989ன் கீழ், நாடு முழுவதிலும் அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதில் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், இன்ஜின் எண், சேசிஸ் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கும். இந்த விவரங்கள் தேசிய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இதற்காக வழங்கப்படும் க்யூஆர் கோடு மூலம் இத்தகவல்களை எளிதில் பெறலாம். இதில், செல்போன் எண் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமே, வாகனத்தின் காலாவதி தேதி, கட்டணத் தொகை உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும்,' என கூறப்பட்டுள்ளது.

நன்றி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...