Saturday, 7 October 2023

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தேதி அறிவிப்பு

 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தேதி அறிவிப்பு





14ம் தேதி வங்கி கணக்கில் ரூ.1,000


குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்.,15 முதல்


செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் மாதமே பல பிரச்னைகள் எழுந்த நிலையில், 2வது மாத தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்த மாத தொகை அக்., 14ம் தேதி செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேல்முறையீடு செய்ய அக்.,15ம் தேதி கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.


          நன்றி

Friday, 21 July 2023

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெட்-அப் திரை அறிமுகம்.. இனி செல்போனை குனிஞ்சி குனிஞ்சு பாத்திட்டு போக தேவை இல்ல!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெட்-அப் திரை அறிமுகம்.. இனி செல்போனை குனிஞ்சி குனிஞ்சு பாத்திட்டு போக தேவை இல்ல!

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டில் பொருத்தி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஹெட்ஸ்-அப் திரை (Helmet Head-up Display) ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இருசக்கர வாகன இயக்கத்தை சுலபமாக்கும் பொருட்டே இந்த உயர் வகை தொழில்நுட்ப கருவி உருவாக்கப்பட்டு இருக்கின்றது. தற்போது இக்கருவி விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

கார் ஓட்டுநர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் ஹெட்ஸ்-அப் திரை இப்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையிலேயே உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் இரண்டு இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பலன்பெறும் விதமாக மிக சிறிய ஹெட்ஸ்-அப் திரையை உருவாக்கி இருக்கின்றன.


ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டைகேட் (Digades) நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் டில்ஸ்பெர்க் (Tilsberk). இந்த நிறுவனமே இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெட்ஸ்-அப் திரை உருவாக்கி இருக்கின்றது. டில்ஸ்பெர்க் நிறுவனம் இந்த கருவியை வேறொரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தே தயாரித்து இருக்கின்றது


 


 நேவிகேஷன் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் சைஜிக் (Sygic) நிறுவனத்துடன் இணைந்தே இருசக்கர வாகனங்களுக்கான ஹெட்ஸ்-அப் திரை உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கியரை இருசக்கர வாகனத்துடன் இணைக்கும்பட்சத்தில் பல்வேறு முக்கிய தகவல்களை இந்த திரை வாயிலாகவே அறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


 கியர் இருக்கும் பொசிஷன், ஆர்பிஎம், ஸ்பீடு லிமிட், பெட்ரோல் அளவு, நேரம் மற்றும் வழித் தடம் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த குட்டி திரை வழங்கும். செல்போனை பார்த்தபடியோ அல்லது இருசக்கர வாகனத்தின் திரையைப் பார்த்தபடியோ பயணிப்பதை தவிர்க்க இந்த திரை மிகுந்த உதவியாக இருக்கும்.

இதற்காகவே இந்த திரையை ஜெர்மன் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போது வழித் தடத்தை அறிந்து கொள்ள செல்போன் திரை அல்லது இருசக்கர வாகனத்தின் திரையைக் காட்டாயம் பார்த்தாக வேண்டும் என்கிற சூழல் நிலவுகின்றது. அவ்வாறு அதை பார்க்கும்போது கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்தைச் சந்திக்கும் சூழல் உருவாகின்றது.


இதைத் தவிர்க்க இந்த குட்டி ஹெட்ஸ்-அப் திரை பெரும் உதவியாக இருக்கும். ப்ளூடூத் வாயிலாக செல்போன் உடன் இந்த கருவியை இணைத்துக் கொள்ள முடியும். மேலும், இந்த கருவியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 12 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 இதற்கான பேக்-அப்பை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கே இந்த கருவியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கருவியை எந்த ஹெல்மெட்டில் வேண்டுமானாலும் சுலபமாக இணைத்தல் அல்லது அகற்றல் ஆகியவற்றைச் செய்துக் கொள்ள முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அதிகபட்சம் செகண்டுகள் மட்டுமே இந்த செயலுக்கு எடுத்துக் கொள்ளுமாம்.



 இந்த கருவியைக் கன்ட்ரோல் செய்ய செல்போன் செயலி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக ஹெட்ஸ்-அப் திரையை கன்ட்ரோல் செய்தல் மற்றும் கஸ்டமைஸ் செய்தல் ஆகியவற்றைச் செய்துக் கொள்ள முடியும். தற்போது ஜெர்மனில் மட்டுமே இந்த கருவியை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேவேளையில் வெகு விரைவில் உலக அளவில் இந்த கருவி விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் பெருமளவில் விபத்துகள் குறைவதற்கான சூழல் உருவாகும். இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு சிலர் வழிக்காக செல்போனை பார்க்கும்போதே விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த மாதிரியான சூழலில் இருந்து காக்கவே திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலை வழங்கும் சிறிய ஹெட்ஸ்-அப் திரை உருவாக்கப்பட்டு இருக்கின்றது.


 டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹெட்ஸ்-அப் திரை, ஓட்டுநர்களுக்கு அவர்களின் சிதறவிடாமல் தகவல்களை வழங்கும் திறன் கொண்டது. இப்போது வரை நவீன கால கார்களில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்பெறும் வகையில் இரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் ஹெல்மெட் ஹெட்ஸ்-அப் திரையை உருவாக்கி இருக்கின்றன.

Read more at : LINK

வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்.. பக்குவமா பார்த்து-பார்த்து செதுக்கிய Redmi 12 மொபைல்..

 வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்.. பக்குவமா பார்த்து-பார்த்து செதுக்கிய Redmi 12 மொபைல்..


சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆனா ரெட்மி (Redmi) இப்போது புதிதாக ரெட்மி 12 (Redmi 12) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யவிருக்கிறது. ரெட்மி 12 நாட்டில் அமேசான் வழியாக விற்பனை செய்யப்படும் என்று பிராண்ட் முன்பு தெரிவித்திருந்தது.

தற்போது, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக, புதிய ரெட்மி 12 (Redmi 12) பிளிப்கார்ட் (Flipkart) மூலமாகவும் வெளிவரும் என்ற தகவலை புதிய மைக்ரோசைட் லைவ் விளம்பரம் உறுதி செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அமேசான் மற்றும் Mi ஸ்டோருடன் கூடுதலாக Flipkart வழியாக விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய ரெட்மி 12 சாதனம் மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Silver), ஜேட் பிளாக் (Jade Black) மற்றும் பேஸ்ட்டல் ப்ளூ (Pastel Blue) வண்ண விருப்பங்களில் வரும் என்பதை சியோமி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் புதிய ரெட்மி 12 ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 Redmi 12 ஸ்மார்ட்போன் ஆனது கிரிஸ்டல் கிளாஸ் (Crystal glass) வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் Xiaomi தெரிவித்துள்ளது. ரெட்மி 12 (Redmi 12) இந்திய வேரியண்ட் மாடல் சமீபத்தில் Geekbench பெஞ்ச்மார்க் தரவுத்தளத்தில் காணப்பட்டது. இதில் இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88) சிப்செட்டை கொண்டிருக்கும் என்பதை காண்பிக்கிறது.

 கீக்பெஞ்ச் (Geekbench) பட்டியலின்படி, Redmi 12 இந்திய மாடல் 6 ஜிபி ரேம் அளவை கொண்டிருக்கும் மற்றும் Android 13 உடன் இயங்கும் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ டீஸர்கள் மற்றும் படங்களை அடிப்படையாகக் கொண்ட Redmi 12 இந்திய மாறுபாடு, தாய்லாந்தில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய மாறுபாட்டின் அதே மாதிரியாகத் தெரிகிறது.




Redmi 12 குளோபல் வேரியண்ட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றன என்பதை பார்க்கலாம். இந்த போனின் டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 6.79' இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது முழு எச்டி+ (1080 × 2400 பிக்சல்) தீர்மானம் கொண்ட 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. 


இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88 SoC) உடன் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) உடன் வருகிறது. இது 4 ஜிபி மற்றும் 8 ஜிபி LPDDR4X ரேம் உடன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி eMMC 5.1 ஸ்டோரேஜ் உடன் வரும். இதில் பிரத்யேக மைக்ரோ-SD கார்டு ஸ்லாட் அம்சமும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 உடன் இயங்குகிறது. இந்த மொபைல் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. 8MP செல்பி கேமராவை பேக் செய்துள்ளது. இது 5000mAh பேட்டரியுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.12,999 என்ற தொகையை நெருங்கும் என்று கூறப்படுகிறது.



Read more at : LINK



Thursday, 22 June 2023

How to check PAN card link to Aadhaar card in Tamil

How to check PAN card link to Aadhaar card in Tamil




உங்கள் pan card உடன் aadhaar card இணைத்துஉள்ளதா என்பதை எளிமையாக சரிப்பார்களாம்

Video Link :- Watch Hear

Website Link :- Click Hear

நன்றி


Thursday, 25 May 2023

கடைகளில் பில் போட.. செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம்.. அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு

கடைகளில் பில் போட.. செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம்.. அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு


இந்த நிலையில்தான், கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்கு பில் போட செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

தற்போது பெரும்பாலான கடைகளில் பொருட்கள் வாங்கிய பின் பில் போடுவதற்கு செல்போன் எண் கேட்கப்படுகிறது. உதாரணமாக மால்களில் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் போன் நம்பர் கேட்கப்படுகிறது.

பெரிய கடைகளிலும் போன் நம்பர் கொடுத்தால்தான் பில் போடுவோம் என்றே கூறப்படுகிறது. ஆனால் மக்கள் பலரும் போன் நம்பரை பகிர விரும்புவது இல்லை. பல இடங்களில் வாடிக்கையாளர்கள் சட்ட விதிகளை சொல்லி.. நம்பரை கொடுக்க மாட்டோம் என்று கூறினாலும் கூட.. நம்பர் கொடுத்தால்தான் பொருட்களை கொடுப்போம் என்று சொல்லும் நிலையும் உள்ளது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பரை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையே நிலவுகிறது.

என்ன மோசடி?

இதை வைத்து சில கடைகள் விளம்பரங்களை செய்வது, மோசடிகளை செய்வது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக

1. சில கடைகள் நம்முடைய போன் எண்களை லோன் நிறுவனங்களுக்கு விற்கின்றன. நாம் செலவு செய்யும் தொகையை வைத்து நம்முடைய வாழ்க்கைமுறையை கணக்கிட்டு லோன் கொடுக்கும் நிறுவனங்கள் நம்மை சுற்றி சுற்றி வருகின்றன.

2. மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பலவற்றிற்கும் நமது போன் எண் பகிரப்படுகிறது.

3. நாம் பொருட்கள் வாங்கும் நிறுவனங்கள் சிறப்பு ஆபர்கள் இருந்தால் நமக்கு மெசேஜ் அனுப்புகின்றன.

இப்படி நாம் பில் போட கொடுக்கும் நம்பரை நமக்கே தெரியாமல்.. நம்முடைய அனுமதியே இல்லாமல் பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையத்தில்தான், கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்கு பில் போட செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

என்ன உத்தரவு

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பாக பெரிய வியாபாரிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

துறையின் செயலாளர் ரோகித் குமார் சிங் இது தொடர்பாக கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இப்படி செய்வது சட்டப்படி விதி மீறல் என்று அவர் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்

வாடிக்கையாளர்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் தனிப்பட்ட செல்போன் எண் விவரங்களை தரக்கூடாது. இதை தந்தால்தான் பில் போடுவோம் என்று தொல்லை செய்ய கூடாது.

இது சட்டத்திற்கு எதிரானது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை இது., இது பிரைவசி விதிகளுக்கு எதிரானது. வாடிக்கையாளர்களின் நம்பரை இவர்கள் எங்கே பாதுகாக்கிறார்கள் என்பதில் கேள்வி உள்ளது.

ரீடெயில் விபாபாரிகள், சிஐஐ, பிக்கி போன்ற அமைப்புகள் அனைத்திற்கும் இது தொடர்பாக அறிவுரை வழங்கி இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் தனிப்பட்ட செல்போன் எண் விவரங்களை கேட்க கூடாது. அது வரம்பு மீறல் என்று அறிவுத்தி உள்ளோம்.

இதற்கு முன் வாங்கிய எண்களை ப்ரோமோஷன் பணிகளுக்கு பயன்படுத்துவது, விற்பனை செய்வது தவறானது என்று மத்திய அரசு தனது அறிவிப்பில் கூறி உள்ளது. இதனால் கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்கு பில் போட செல்போன் நம்பர் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

News Link :- Click here

நன்றி

Wednesday, 19 April 2023

எது! WhatsApp இன்டர்நெட் இல்லாவிட்டாலும் இயங்குமா? அதுவும் ஒரே கணக்கு 4 சாதனங்களில் இயங்குமா?

எது! WhatsApp இன்டர்நெட் இல்லாவிட்டாலும் இயங்குமா? அதுவும் ஒரே கணக்கு 4 சாதனங்களில் இயங்குமா?


இனி இன்டர்நெட் இல்லாவிட்டாலும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாமா? என்னப்பா சொல்றீங்க? அதுவும் 1 இல்லை 2 இல்லை மொத்தம் 4 ஸ்மார்ட்போனில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை எந்தவித தடையும் இல்லாமல் பயன்படுத்தலாமா? அது எப்படி முடியும்? இது என்ன புது அம்சம்?

வாட்ஸ்அப் தொடர்ந்து பல அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ஒரு சிறிய குழு பயனர்களுடன் பல மாதங்கலாக சோதனை செய்து வரும் புதிய அம்சம் தான் கம்பெனியின் மோட் அம்சமாகும். மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான WhatsApp அனைத்து பீட்டா சோதனையாளர்களுக்கும் 'கம்பெனியன் மோட்' அம்சத்தை வெளியிடுகிறது.

இது ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களை இணைக்க பயனர்களை அனுமதிக்கிறது. மேலும், உங்கள் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரி மொத்தத்தையும் மற்றொரு சாதனத்தில் அணுக அனுமதிக்கிறது. WABetaInfo இன் அறிக்கையின்படி, Android v2.23.8.2 வெர்ஷனுக்கான WhatsApp பீட்டாவுடன், திட்டத்தில் உள்ள அனைவருக்கும் இந்த அம்சம் இப்போது பயன்படுத்த கிடைக்கிறது. பதிவிறக்கத்தைத் தொடங்கிய பிறகு, அனைத்து பீட்டா சோதனையாளர்களும் இந்த அம்சத்தைப் பயன்படுத்த 24 மணிநேரம் ஆகலாம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்அப் கம்பெனியின் மோட் என்றால் என்ன? அது என்ன செய்யும்? பல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை செயல்பட வைப்பதே இந்த அம்சத்தின் நோக்கமாகும். பயனர்கள் தங்கள் தற்போதைய WhatsApp கணக்கை மற்றொரு மொபைல் சாதனத்துடன் இணைக்க இது உதவும். ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் கணக்கை இரண்டாவது மொபைல் ஃபோனுடன் இணைத்த பிறகு, முதல் ஃபோனில் இன்டர்நெட் சேவை இல்லாவிட்டாலும், பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை இரண்டாவது சாதனத்தில் பயன்படுத்தலாம்.

தற்போது, ​​iOSக்கான வாட்ஸ்அப்பில் கம்பெனியின் மோட் அணுக கிடைப்பதில்லை. இதன் விளைவாக, இரண்டாவது சாதனம் Android ஸ்மார்ட்போனாகவோ அல்லது டேப்லெட்டாகவோ இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கம்பெனியின் மோட் படி, உங்கள் வாட்ஸ்அப் அரட்டை வரலாறு உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களிலும் சிங்க் செய்யப்படும். இப்போது இது பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது என்றாலும், இது இன்னும் சோதனையிலேயே உள்ளது.

ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களை இணைக்க இது உங்களை அனுமதிக்கும் என்பது பலருக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் முதல் சாதனத்தில் இன்டர்நெட் சேவை இல்லாவிட்டாலும், உங்கள் இரண்டாம் சாதனத்தில் அல்லது மற்ற சாதனத்தில், உங்கள் தனிப்பட்ட மெசேஜ் மற்றும் அழைப்புகள் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். இதனால் பாதுகாப்பை பற்றி கவலைப்பட தேவையில்லை.

கம்பெனியின் மோட் அம்சத்தை எப்படி இயக்குவது?
இரண்டாவது ஆண்ட்ராய்டு மொபைல் சாதனத்தை இணைப்பது எப்படி?
உங்கள் இரண்டாவது ஆண்ட்ராய்டு போனில், கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று, வாட்ஸ்அப் மெசஞ்சர் அல்லது வாட்ஸ்அப் பிசினஸின் சமீபத்திய பீட்டா பதிப்பைப் பதிவிறக்கவும்.
இறுதியாக, பதிவுத் திரையில் உள்ள ஓவர்ஃப்ளோ மெனுவைத் தட்டும்போது "Connect a device" விருப்பம் தோன்றும்.
வாட்ஸ்அப்பைத் தொடங்கி, உங்கள் பிரதான சாதனத்தில் Settings > Connected devices on your main device கிளிக் செய்யவும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய இந்த அம்சம் ஆக்டிவேட் செய்யப்படும்.

Saturday, 25 February 2023

ஈஷா வில் மகா சிவராத்திரி அன்று அங்கு நமக்கு கொடுக்கும் கவரில் என்ன இருக்கிறது

ஈஷா வில் மகா சிவராத்திரி அன்று அங்கு நமக்கு கொடுக்கும் கவரில் என்ன இருக்கிறது



Video Link :- Watch This


நன்றி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...